/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை வழக்கு: 4 பேருக்கு 'குண்டாஸ்'
/
கொலை வழக்கு: 4 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : டிச 18, 2025 04:54 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் அருகே காளியம்மன் கோவில் 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம், 21. கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி முகமது ரியாஸ், 23, வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, ஆத்துப்பாலம் அருண்பிரகாஷ், 20, மின்னாம்பள்ளி, எல்லம்மாள் கோவில் தெரு மணிகண்டன், 19, ஆகியோர், கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த, 1ல் மின்னாம்பள்ளியை சேர்ந்த ஜெயசூர்யா மீது, தலையில் கல்லை போட்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயசூர்யா, 4ல் உயிரிழந்தார்.
இதனால் கொலை வழக்காக மாற்றிய காரிப்பட்டி போலீசார், 4 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் அவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.

