/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொலை வழக்கு கைதி தற்கொலைக்கு முயற்சி
/
கொலை வழக்கு கைதி தற்கொலைக்கு முயற்சி
ADDED : அக் 15, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னவர், 27. இவர் ரவுடி செல்லதுரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று, அங்குள்ள கழிப்பறையில் இருந்த, பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறை வார்டன், உடனே அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அவருக்கு, போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர் சம்பந்தப்பட்ட கொலை வழக்கு, வரும், 27ல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தற்கொலைக்கு முயன்றுள்ளார்.