ADDED : அக் 15, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கன்னங்குறிச்சி அருகே பெரிய கொல்லப்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிஹரன், 31. இவர், கடந்த, 8 மதியம், 4 ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனை முன் பைக்கை நிறுத்திய நிலையில் மாயமானது. அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கோவை, சிங்காநல்லுார், உப்பிளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், 30, திருடியது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், பைக்கை மீட்டனர். மேலும் விசாரணையில், அவர் ஏற்கனவே சேலம் மாவட்டம், திருப்பூரில் தலா, 2, ஈரோட்டில், 3 பைக்குகளை திருடியது தெரிந்தது. பின் அனைத்து பைக்கு
களையும், போலீசார் மீட்டனர்.