/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முத்தமிழ் சங்கம் 50 பேருக்கு விருது
/
முத்தமிழ் சங்கம் 50 பேருக்கு விருது
ADDED : நவ 25, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்ட முத்தமிழ் சங்கம் சார்பில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியை சேர்ந்த, 50 சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா, சேலத்தில் நேற்று நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு தலைமை வகித்தார். அதில் பெரியார் பல்-கலை முன்னாள் துணைவேந்தர் தங்கராசு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த, 50 பேருக்கு முத்தமிழ் விருது, சான்றிதழ் வழங்கி, பொன்னாடை போர்த்தி பாராட்டினார். நிறுவன தலைவர் பொன்.சந்திரன் பேசினார். முத்தமிழ் சங்க செயலர் கோவிந்தராஜ், உதவி தலைவர்கள் இளங்கோவன், அசோகன், இணை செயலர் பொன்னுசாமி, பொருளாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.