/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாயை கவ்விச்சென்ற மர்ம விலங்கு கேமரா பொருத்தி கூண்டுகள் வைப்பு
/
நாயை கவ்விச்சென்ற மர்ம விலங்கு கேமரா பொருத்தி கூண்டுகள் வைப்பு
நாயை கவ்விச்சென்ற மர்ம விலங்கு கேமரா பொருத்தி கூண்டுகள் வைப்பு
நாயை கவ்விச்சென்ற மர்ம விலங்கு கேமரா பொருத்தி கூண்டுகள் வைப்பு
ADDED : மே 09, 2025 02:17 AM
மேட்டூர், மேச்சேரி, வெள்ளாறு ஊராட்சி, மேல்காளிகவுண்டனுாரை சேர்ந்த விவசாயி சிவானந்தம். இவர் வளர்த்து வந்த இரு நாய்களை கடந்த, 4 இரவு, மர்ம விலங்கு கடித்து காயப்படுத்தியது. நேற்று முன்தினம் இரவு, அருகே உள்ள அரசமரத்துார் குப்புசாமி வீடு அருகே, அவரது வளர்ப்பு நாயை மர்மவிலங்கு கவ்விச்சென்றது.
இதுகுறித்து விவசாயிகள், டேனிஷ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் புகார் செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் சிவானந்தம் வீடு அருகே சில இடங்களில், 6 கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர். நேற்று மாலை, சிவானந்தம் வீடு அருகே ஒரு கூண்டு, வன எல்லையில் ஒரு கூண்டு வைத்து, மர்ம விலங்கு குறித்து கண்காணிக்கின்றனர்.