ADDED : டிச 31, 2024 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: திருமணமான பெண், மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலுார் அருகே, செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சி, மல்லக்கவுண்டனுார் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சதீஸ்குமார், 21. கொத்தனாராக உள்ளார். மனைவி அன்னபூரணி, 19. மூன்று வயதில் மகன் உண்டு. நேற்று காலை, வீட்டில் அன்னபூரணி துாக்கிலிட்ட நிலையில் உடலை மீட்டுள்ளனர். இது குறித்து அன்னபூரணி தாய் வசந்தா அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி விசாரணையை துவக்கியுள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் உண்மை நிலவரம் தெரியவரும்.