ADDED : ஜூலை 19, 2025 01:12 AM
மேட்டூர், மேட்டூர், காவிரி பாலத்தை சேர்ந்தவர் மயிலி, 45. இவரது முதல் கணவர் குமார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். குடும்ப பிரச்னையால் குமாரை பிரிந்த மயிலி, மேட்டூர் காவிரி பாலம் அருகே பெற்றோர் வீட்டில் வசித்தார். 18 ஆண்டுக்கு முன், அவரை விட, 9 வயது சிறியவரான, உறவினர் கணேசனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால், ஒரு பெண்ணை தத்தெடுத்து வளர்த்தனர்.
மயிலிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கணேசன் கண்டித்து வந்தார். கடந்த, 17 மதியம், 3:45 மணிக்கு, மயிலி வீட்டுக்கு சகோதரி ஈஸ்வரி வந்தார். அப்போது, நாவக்காய் சாப்பிட்டு கொண்டிருந்த மயிலியை பார்த்து, 'இதை சாப்பிட்டால் துவர்க்கும். வேண்டாம்' என கூறிச்சென்றார். சிறிது நேரத்தில் கணேசன் வந்தபோது, மயிலி மயங்கி கிடந்தார். உடனே ஈஸ்வரிக்கு தகவல் கொடுத்தார். பின் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மயிலி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஈஸ்வரி புகார்படி, மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.