/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஈரோடு வியாபாரியிடம் காசோலை மோசடி தலைமறைவு நாகர்கோவில் வியாபாரி கைது
/
ஈரோடு வியாபாரியிடம் காசோலை மோசடி தலைமறைவு நாகர்கோவில் வியாபாரி கைது
ஈரோடு வியாபாரியிடம் காசோலை மோசடி தலைமறைவு நாகர்கோவில் வியாபாரி கைது
ஈரோடு வியாபாரியிடம் காசோலை மோசடி தலைமறைவு நாகர்கோவில் வியாபாரி கைது
ADDED : ஏப் 01, 2025 07:33 AM
ஈரோடு,: ஈரோட்டில் காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான நாகர்கோவிலை சேர்ந்த ஜவுளி வியாபாரியை, தாலுகா போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்-தனர்.
ஈரோடு, முனிசிபல் காலனி, வைரம் தெருவை சேர்ந்தவர் கார்த்-திகேயன், 36; மலர்கொடி ஜவுளி மொத்த விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார், லாலா புதுவீதியை சேர்ந்தவர் ராம்குமார் (எ) ராம-சாமி, 48; ஸ்ரீராம் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளி மற்றும் கைத்-தறி துணிகளை பல்வேறு ரகங்களில் தவணை முறையில், ௪.௩௦ லட்சம் ரூபாய்க்கு மொத்தமாக வாங்கியுள்ளார்.
இதற்கான பாக்கி தொகையை பலமுறை கேட்டும் அனுப்பவில்லை. இந்நிலையில் ராம்குமார், 2019 டிச.,ல் தலா, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் இரு காசோலைகளை தந்துள்ளார். ஆனால் இரு காசோலைகளிலும் பணம் எடுக்க முடியாதபடி செய்ததால், கார்த்திகேயனால் பணம் பெற இயலவில்லை. தன்னை ஏமாற்றும் நோக்கத்தில் காசோலை மோசடி செய்ததால், ஈரோடு விரைவு நீதிமன்றம் எண்-1ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இறுதி விசாரணை முடித்து, கடந்தாண்டு நவ.,8ல் மாஜிஸ்திரேட் முனிக்குமார் தீர்ப்பளித்தார்.
காசோலை மோசடி செய்த ராம்குமாருக்கு மூன்று மாத சிறை தண்டனை, பாதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு மூன்று மாதத்தில் இழப்பீட்டு தொகை ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். இழப்பீட்டு தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க தீர்ப்பளித்தார். மூன்று மாத-மாக இழப்பீட்டு தொகை வழங்காமல், ராம்குமார் தலைமறை-வாக இருந்தார். இந்நிலையில் ஈரோடு வந்த ராம்குமாரை, தாலுகா போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.