/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாஞ்சில் சம்பத், பெங்களூரு புகழேந்தி மீது அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு புகார் மனு

ADDED : அக் 15, 2024 07:33 AM
சேலம்: சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாநில துணை செயலாளர் சரவணன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று வந்தனர். அவர்கள், மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின் குமார் அபினபுவிடம் புகார் மனு அளித்தனர்.
பின், நிருபர்களிடம் சரவணன் கூறியதாவது: தி.மு.க.,வை சேர்ந்த நாஞ்சில் சம்பத் மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மீது வேண்டுமென்றே அவதுாறாகவும், அநாகரிகமாகவும், சமூக வலைதளத்தில் பேசி வருகின்றனர். இது, இ.பி.எஸ்., பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில், காழ்ப்புணர்ச்சியோடு திட்டமிட்டு பேசி வருகின்றனர். அந்த வீடியோவில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., மீது பெண்களை தொடர்புபடுத்தி பேசுவது, சொல்ல முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசி வந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால், சட்ட ரீதியான முறையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வீரக்குமார், சித்தன், ஐ.டி.,விங்க் ஜெகதீஸ், செல்வராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்,