/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்
/
கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்
கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்
கலெக்டரிடம் புகார் அளித்ததும் நரசிங்கபுரம் கமிஷனர் இடமாற்றம்
ADDED : பிப் 22, 2024 07:18 AM
ஆத்துார் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், கமிஷனர் முகமது சம்சுதீன், அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது, அ.தி.மு.க., குழு தலைவர் கோபி தலைமையில் கவுன்சிலர்கள், 'வீட்டு வரி, குடிநீர் வரி, சொத்து வரி வழங்குவதற்கு அலைக்கழிக்கின்றனர். இதுதொடர்பான மனுக்களுக்கு லஞ்சம் கேட்கின்றனர். பலமுறை புகார் அளித்தும், கமிஷனர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர்.
இதற்கு, 'விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டர் பதில் அளித்து சென்றார்.
இதையடுத்து நகராட்சி கமிஷனர் முகமதுசம்சுதீனை, ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகராட்சிக்கு இடமாற்றி, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டார்.
பட்டா வழங்க கோரிக்கை
ஆத்துார் அருகே ஈச்சம்பட்டியில், 2000ல், அப்போதைய அமைச்சர் ஆறுமுகம், 84 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். அந்த இடத்தில் வசிக்கும், 18 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதி, 32 பேருக்கு வழங்கப்படவில்லை.
அந்த இடம் நீர் நிலை பகுதியாக உள்ளதாக கூறி, வீட்டு வரி ரசீதும் வழங்கப்படவில்லை. இதனால் பட்டா வழங்கக்கோரி, ஆத்துார் பயணியர் மாளிகைக்கு வந்த கலெக்டரிடம், மக்கள் மனு அளித்தனர்.