/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
/
நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம் ஒத்திவைப்பு
ADDED : டிச 10, 2024 07:42 AM
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி கூட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெறுவதாக
அறிவிக்கப்பட்டது. நகராட்சி தலை-வரின் அறையில், தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் அலெக்சாண்டர், துணைத் தலைவர் தர்மராஜ், தி.மு.க., - அ.தி.மு.க., - காங்., கவுன்-சிலர்கள் வந்தனர். ஆனால், நகராட்சி கமிஷனர் (பொ) சையது-முஸ்தபாகமால், கூட்டத்திற்கு வரவில்லை. 2 மணி நேரத்திற்கு மேல்
கவுன்சிலர்கள் காத்திருந்தபோதும், கமிஷனர் உள்ளிட்ட அலுவலர்கள் வராததால், கவுன்சிலர்கள்
சென்றனர். அப்போது, தலைவர் அலெக்சாண்டர், 'நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், தேதி குறிப்பிடாமல்
ஒத்தி வைக்கப்படுகிறது' என, அறிவித்தார்.