sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு

/

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு

இடைப்பாடி அரசு பள்ளியில் தேசிய கீதம் புறக்கணிப்பு


ADDED : பிப் 04, 2025 07:04 AM

Google News

ADDED : பிப் 04, 2025 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், இறைவ-ணக்கம் போடும் போது, தேசிய கீதம் பாடாமல் புறக்கணிக்கப்-பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பள்ளி தொடங்கும் முன் காலை, 9:10 மணிக்கு நடத்தப்படும் இறைவணக்க வழிபாட்டு கூட்-டத்தில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, பின்னர் உறுதிமொழி, திருக்குறள், பழமொழி, பொன்மொழி, பொது அறிவு, ஆசிரியர் உரை, தலைமை ஆசிரியர் உரை வரிசையாக நடத்தப்பட்டு, இறு-தியாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என, தமிழக அரசு அறி-வுறுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்-நிலைப்பள்ளியில், 1,700க்கும் மேற்பட்ட

மாணவர்களும், இங்-குள்ள மாதிரி பள்ளியில், 160க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி-யரும் படிக்கின்றனர். இங்கு

நேற்று இறைவணக்க வழிபாட்டு கூட்டம் நடந்தது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி, திருக்குறள்,

பழமொழி, பொன்மொழி, பொதுஅறிவு, ஆசிரியர் உரை, தலைமை ஆசிரியர் உரை வரிசையாக நடத்தப்பட்டு,

தேசி-ய கீதம் பாடாமலேயே கூட்டம் நிறைவு பெற்றது. இது மாண-வர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை

ஏற்படுத்தியது.

இது குறித்து தலைமை ஆசிரியர் விஜயா கூறுகையில், ''பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு,

திருப்புதல் தேர்வு நடப்பதால், அந்த மாணவர்கள், 400க்கும் மேற்பட்டோர் இறைவ-ணக்க கூட்டத்தில்

பங்கேற்காமல், வகுப்பறைகளில் படித்து கொண்டு இருந்தனர். தேசிய கீதம் பாடினால், எழுந்து நிற்கும்-போது

அவர்களின் படிப்பில் கவனம் சிதறும் என்பதால் பாட-வில்லை,'' என்றார்.சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள் கூறுகையில்,'' தேசிய கீதம் கண்டிப்பாக பாட வேண்டும்.

வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்காகவோ, சாலையில் நடந்து செல்பவர்களுக்கா-கவோ, பள்ளிக்கு வராமல்

வீட்டில் உள்ள மாணவர்களுக்கா-கவோ தேசிய கீதத்தை புறக்கணிக்கக் கூடாது. இது குறித்து விசா-ரணை

நடத்தப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us