/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு
/
தேசிய குழந்தைகள் விருது விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 15, 2024 07:08 AM
சேலம் : சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
மத்திய அரசின் மகளிர், குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் மூலம், 'பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது - 2024' அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த குழந்தைகள் சார்பாகவும், தனிப்பட்ட நபர், நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம்.
புது கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி வாய்ந்த குழந்தைகளை அங்கீகரிக்க, 'பால சக்தி புரஷ்கார்' விருது, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய் காசோலை, பதக்கம், சான்றிதழ், தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டது.
குழந்தைகள் மேம்பாடு; நலம்; பாதுகாப்பு போன்ற துறைகளில் குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள், நிறுவனங்களை அங்கீகரிக்க, 'பால கல்யாண் புரஷ்கார்' எனும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர் விருதுக்கு, ஒரு லட்சம் ரூபாய் காசோலை, நிறுவன விருதுக்கு, 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கு, https://awards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். பிற வழிகளில் அனுப்பப்படும் விண்ணப்பம் ஏற்கப்படாது. விண்ணப்பிக்க, ஜூலை, 31 கடைசி நாளாகும்.