ADDED : டிச 25, 2024 07:40 AM
ஓமலுார்: ஓமலுாரில் வட்ட வழங்கல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின விழா பேரணி நேற்று நடந்தது. ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார் தலைமை வகித்தார். மேட்டூர் சப்-கலெக்டர் பொன்மணி, பேரணியை தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும், தொடங்கிய இடத்தில் முடிந்தது. காடையாம்பட்டி தாசில்தார் மனோகரன், உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல் குழு உறுப்பினர் முகுந்தபூபதி, ஓமலுார் வட்ட வழங்கல் அலுவலர் கணேசன், தனியார் கல்லுாரி மாணவியர், வருவாய்த்துறையினர், நுகர்வோர் பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும், தாரமங்கலம், அமரகுந்தி ஏரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஓமலுார் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், ஒரு கோடி பனை மரங்கள் நடவு செய்யும் பணியை, ஓமலுார் வட்ட வழங்கல் அலுவலர் கணேசன் தொடங்கி வைத்தார்.

