/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய சுகாதார இயக்க குழு மருத்துவமனையில் ஆய்வு
/
தேசிய சுகாதார இயக்க குழு மருத்துவமனையில் ஆய்வு
ADDED : அக் 08, 2025 02:09 AM
சேலம், தேசிய சுகாதார இயக்கம் சார்பில், ஐ.ஏ.எஸ்., அருண் தம்புராஜ் தலைமையில், 20 பேர் குழுவினர் நேற்று முதல், 3 நாட்களுக்கு, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளை பார்வையிட்டு ஆய்வை தொடங்கினர்.
அதன்படி ஓமலுார் அரசு மருத்துவமனை செயல்பாடு குறித்து, தேசிய சுகாதார திட்டம் சென்னை மருத்துவர் சங்கமேஸ்வரன் தலைமையில் மருத்துவ காப்பீடு அதிகாரி செம்புசெல்வன், முதல்வர் காப்பீடு திட்ட மருத்துவர் சுபாஸ் உள்பட, 5 பேர் குழுவினர், வார்டு வாரியாக ஆய்வு செய்தனர்.
அப்போது, எக்ஸ்ரே பிலிமில் அன்றைய தேதியை இணைத்து பதிவு செய்ய அறிவுரை வழங்கினர். ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஹெலன்குமார்(பொ) உடனிருந்தார்.