/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாமந்தியில் இலைப்பேன் பாதிப்பை தடுக்க அறிவுரை
/
சாமந்தியில் இலைப்பேன் பாதிப்பை தடுக்க அறிவுரை
ADDED : அக் 08, 2025 02:09 AM
ஓமலுார், காடையாம்பட்டி, வேப்பிலை ஊராட்சி மேட்டூர், எட்டுக்கல் பகுதியில், 25 ஏக்கரில் சாமந்தி பயிரிடப்பட்டுள்ளது.
ஆனால் பரவலாக இலைப்பேன் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தகவல்படி, காடையாம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் ப்ரியங்கா தலைமையில், பூச்சியியல் மற்றும் நோயியல் வல்லுனர் குழுவினர், நேற்று கள ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து இலைப்பேன் பாதிப்பை கட்டுப்படுத்த சாமந்தி பயிரிடப்பட்டுள்ள வயல்களின் ஓரங்களில் மிளகாய், சின்ன வெங்காயம் பயிர் இடுவதை தவிர்க்க வேண்டும்; சோளம், கம்பு அல்லது மக்காச்சோளம் வரப்பு பயிராக பயிரிடும்போது இலைப்பேன் தாக்குதல் பரவுவதை தவிர்க்கலாம்; நீல நிற ஒட்டும் பொறி பயன்படுத்துவன் மூலம் பூச்சி பரவுதல் தாக்கத்தை குறைக்கலாம்; வாடல் நோய், சருகு நோய், அழுகல் நோயை கட்டுப்படுத்த சாமந்தி சாகுபடி செய்யும் முன், நடவு வயலில் ஏக்கருக்கு, 1 கிலோ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ், ஏக்கருக்கு, 1 கிலோ டிரைகோடெர்மாவிரிடி, 100 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்; பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்க வேண்டும்; வேர் அழுகலை கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸி குளோரைடு, 2 கிராம், வேரில் நனையும்படி தெளிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர்.