ADDED : பிப் 29, 2024 03:54 AM
ஓமலுார்: சேலம், கருப்பூர் பெரியார் பல்கலையில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதில் துணைவேந்தர் ஜெகநாதன், கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
அதில் பல்கலையில் உள்ள துறைகள் சார்பில், 43 குழுக்கள், பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகளில் இருந்து, 44 குழுக்கள் என, மாணவ, மாணவியர், அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். அறிவியல் அறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் பார்வையிட்டனர். உணவு அறிவியல் துறைத்தலைவர் பூங்கொடி, புல முதன்மையர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் மேச்சேரி வட்டாரத்தில், 30 அரசு துவக்கப்பள்ளியின், 250 மாணவ, மாணவியர் அறிவியல் படைப்புகள், மேச்சேரி அரசு துவக்கப்பள்ளியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் ராஜேஷ்கண்ணன், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் செயலாளர் லால், மாணவர்களுக்கு, சர் சி.வி.ராமன், கலிலியோ, டார்வின், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரின் முகமூடிகளை வினியோகித்தார். அவற்றை மாணவர்கள் அணிந்து, அறிவியல் தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தலைமை ஆசிரியை அமுதா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் திருநாவுக்கரசு, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அதேபோல் சேலம் மரவனேரியில் உள்ள புனிதபால் மேல்நிலைப்பள்ளியில், 150 மீ., உயரத்துக்கு ராக்கெட் ஏவும் காட்சி, மாணவ, மாணவியருக்கு செய்து காட்டப்பட்டது.

