/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் சார்பில் உலக மூளை தினத்தை ஒட்டி தேசிய கருத்தரங்கு

ADDED : ஜூலை 28, 2025 03:49 AM
சேலம்: நரம்பியல் கோளாறுகளால் ஏற்படும் மூளை பாதிப்பு குறித்து, மக்களுக்கு எடுத்துரைத்து, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உணர்த்த உலக மூளை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில், அதன் நரம்பியல் தொழில்நுட்ப பிரிவு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, தேசிய கருத்தரங்கை நடத்தியது. டீன் செந்தில்குமார்
முன்னிலை வகித்தார்.
இதில் லண்டன் மான்செஸ்டர் பல்கலை சுகாதார பிரிவு அறிவியலாளர் விஜய், விநாயகா மிஷன் புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வஸ்டர், சென்னை மியாட் மருத்துவமனை மருத்துவ நரம்பியலாளர் ரிச்சர்ட் இளமுருகன் பேசினர். மேலும் மாணவ, மாணவியருக்கு பட விளக்க காட்சி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர், நரம்பியல் பிரிவு தொழில்நுட்பவியலாளர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை, கல்லுாரி நரம்பியல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் காளிஸ் விஜய், சுரேந்தர் செய்திருந்தனர்.