/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
/
தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
ADDED : அக் 31, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சர்தார் வல்லபபாய் படேல் பிறந்தநாளை நினைவுகூறும்படி தேச பாதுகாப்பு, ஒற்றுமை, ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கான நம் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்படி, அக்., 31, தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.
அவரது பிறந்தநாளான இன்று அரசு விடுமுறை என்பதால், முன்னதாகவே நேற்று, தேசிய ஒற்றுமைநாள் உறுதிமொழி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கலெக்டர் பிருந்தாதேவி, உறுதிமொழியை வாசிக்க, அதை, அனைத்து துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

