/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உதவித்தொகைக்கு புதுப்பிப்பதில் அலட்சியம்; இன்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு கெடு
/
உதவித்தொகைக்கு புதுப்பிப்பதில் அலட்சியம்; இன்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு கெடு
உதவித்தொகைக்கு புதுப்பிப்பதில் அலட்சியம்; இன்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு கெடு
உதவித்தொகைக்கு புதுப்பிப்பதில் அலட்சியம்; இன்று வரை தலைமை ஆசிரியர்களுக்கு கெடு
ADDED : ஜன 28, 2025 07:25 AM
சேலம்: உதவித்தொகை பெற, புதுப்பிக்கப்படாத மாணவர்களின் கணக்கு விபரங்களை, இன்று மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில், எஸ்.சி., எஸ்.டி., மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு ப்ரீ மெட்ரிக் உதவித்தொகையாக வகுப்பு வாரியாக, 4,500 ரூபாய் வரையும், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, 7,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
முதன்முறையாக இதை பெற, தமிழ்நாடு இ-ஸ்காலர்ஷிப் இணையதளத்தில் விண்ணப்பித்து, நலத்துறை அலுவலகத்துக்கு தபாலில் அனுப்ப வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், உதவித்தொகையை புதுப்பிக்க வேண்டும். நடப்பு கல்வியாண்டு முடிவடைய உள்ள சூழ்நிலையிலும், இன்னும் ஏராளமான மாணவர்களுக்கு, புதுப்பித்தல் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இதை மாவட்ட வாரியாக பட்டியல் எடுத்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ளார்.
இப்பட்டியலில் உள்ள மாணவர்களின் விபரங்களை புதுப்பித்து, இன்று மாலைக்குள் செயலாக்கத்துக்கு கொண்டு வர வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

