/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
வாகன சோதனையில் அலட்சியம்; 10 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஜன 20, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: பொங்கல் பண்டிகை முடிந்து ஏராளமானோர் ஊர் திரும்புவதால், சேலம் மாவட்டத்தில் ஓமலுார், சங்ககிரி, மேட்டூர், வாழப்பாடி, ஆத்துார் உள்பட, 8 உட்கோட்டங்களில், டி.எஸ்.பி.,க்கள் மேற்பார்வையில், வாகன சோதனையை தீவிரமாக மேற்கொள்ள, எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை தொடர்ந்தது. இதை, எஸ்.பி., ஆய்வு செய்தார். அப்போது, மகுடஞ்சாவடி எஸ்.ஐ., ஆத்துார் ஊரகம், வீரகனுார், நங்கவள்ளியை சேர்ந்த, 3 எஸ்.எஸ்.ஐ., 6 ஏட்டுகள் என, 10 பேர், சரிவர வாகன சோதனை மேற்கொள்ளாதது தெரிந்தது. இதனால் அவர்களை, மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., உத்தரவிட்டார்.