/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்
/
பணியில் அலட்சியம்; எஸ்.ஐ., இடமாற்றம்
ADDED : செப் 01, 2025 04:14 AM
மேட்டூர்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றிய பிரசாந்த் மீது, இரவு ரோந்து பணியில் ஈடுபடாதது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனால் கடந்த ஆண்டு மேட்டூர் ஸ்டேஷக்கு மாற்றப்பட்டார். இந்நி-லையில் நேற்று அவரை, சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., கவுதம்கோயல்
உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:கடந்த மாதம், 25ல் மேட்டூர் நால்ரோட்டில் ரவுடிகளிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்-கப்படவில்லை. கடந்த, 15ல் மேட்டூர் புனித மரியன்னை ஆலய தேர்பவனியின்போது, ஒருவரை எஸ்.ஐ., தாக்கியுள்ளார். நேற்று முன்தினம் மேட்டூரை சேர்ந்த இரு சாம்பல் லாரி உரிமையாளர்க-ளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதிலும் நடவடிக்கை இல்லை. காவேரிகிராஸ் பகுதியில் சட்டவிரோதமாக விற்ப-னைக்கு பதுக்கி வைத்திருந்த, 300 மது பாட்டில்களில், 10 பாட்-டில்களை மட்டும் எஸ்.ஐ., நேற்று காலை பறிமுதல் செய்-துள்ளார். இதுபோன்று பல்வேறு புகார்களால் இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறு கூறினர்.