/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெல்லை - மே.பாளையம் சிறப்பு வார ரயில் நீட்டிப்பு
/
நெல்லை - மே.பாளையம் சிறப்பு வார ரயில் நீட்டிப்பு
ADDED : ஆக 27, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு வார ரயில், ஞாயிறு இரவு, 7:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை அடைகிறது. இந்த ரயில், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திங்கள் இரவு, 7:45க்கு கிளம்பும் மேட்டுப்பாளையம் -திருநெல்வேலி சிறப்பு வார ரயில், அடுத்தநாள் காலை, 7:45க்கு நெல்லையை அடைகிறது. இந்த ரயில், டிச., 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, சேலம்
ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

