/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைதி கடத்தல் வழக்கு நெல்லை ரவுடி ஆஜர்
/
கைதி கடத்தல் வழக்கு நெல்லை ரவுடி ஆஜர்
ADDED : டிச 12, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், டிச. 12-
இலங்கையை சேர்ந்த பிலாலுதீன் என்பவர், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, 2002ல் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு, குடல் இறக்க பிரச்னையால், சேலம் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரை, 10 பேர் கும்பல் கடத்திச்சென்றது.
இந்த வழக்கில், திருநெல்வேலியை சேர்ந்த, பனங்காட்டு படை கட்சி தலைவரான, ரவுடி ராக்கெட் ராஜா உள்பட, 10 பேருக்கு தொடர்பிருப்பது தெரிந்தது. இந்த வழக்கு சேலம், 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதனால் ராஜா நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். விசாரித்த நீதிபதி, வரும் ஜன., 8க்கு வழக்கை ஒத்திவைத்தார்.

