/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா
ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
ஆத்துார்: சீலியம்மபட்டியில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடந்தது.ஆத்துார் அருகே, சீலியம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு நடுநி-லைப்பள்ளியில் நேற்று, புதிய பாரத எழுத்தறிவு திட்ட தொடக்க விழா, ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் நடந்தது.
அப்போது, அனைவரும் கல்வி கற்கும் நிலை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில், 15 வயதுக்கு மேல் உள்ள எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்க வேண்டும். கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க வேண்டும் என, ஆசிரி-யர்கள் அறிவுறுத்தினர். இதில், தலைமை ஆசிரியர் புஷ்பா, ஆசி-ரியர் பயிற்றுனர் சுப்ரமணியன், தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.