/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 35,000 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 35,000 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 35,000 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வு 35,000 பேருக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : ஏப் 19, 2025 01:33 AM
சேலம்:
புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வில் பங்கேற்ற, 35,000 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழக பள்ளி சாரா கல்வி இயக்ககத்தின் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், எழுத படிக்க தெரியாத, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 6 மாத பயிற்சி வழங்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கடந்த நவ., மாதத்தில் நடந்த தேர்வில், 35 ஆயிரத்து 2 பேர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் முகாம், நேற்று முன்தினம் சேலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சேலம் நகர்ப்புறம், ஊரக ஒன்றியத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பள்ளி சாரா கல்வி இயக்கக இணை இயக்குனர் பொன்குமார், சான்றிதழ்களை வழங்கி, தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர், உதவி திட்ட அலுவலர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை, 1.03 லட்சம் பேர் இத்திட்டத்தில் கல்வியறிவு பெற்றுள்ளதாகவும், வரும் ஜூன் தேர்வுக்கு, 1,918 மையங்களில், 40 ஆயிரத்து, 317 பேர் பயிற்சி பெற்று வருவதாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தெரிவித்தார்.

