/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு மாற்றாக புதிய நிறுவனம் ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் தீர்வு: சங்க செயலர்
/
ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு மாற்றாக புதிய நிறுவனம் ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் தீர்வு: சங்க செயலர்
ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு மாற்றாக புதிய நிறுவனம் ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் தீர்வு: சங்க செயலர்
ஸ்விக்கி, ஜொமாட்டோவுக்கு மாற்றாக புதிய நிறுவனம் ஆன்லைன் விற்பனைக்கு விரைவில் தீர்வு: சங்க செயலர்
ADDED : ஜூலை 03, 2025 02:00 AM
நாமக்கல், ஜூலை ''கூடுதல் கமிஷன் வசூலிக்கும் ஸ்விக்கி, ஜொமாட்டோ நிறுவனங்களுக்கு மாற்றாக, புதிய ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது,'' என, சங்க செயலாளர் அருள்குமரன் கூறினார்.
நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில், 100க்கும் மேற்பட்ட ஓட்டல், பேக்கரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு உணவு வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன.
அந்நிறுவனத்தினர், ஓட்டல் உரிமையாளர்களிடம், விளம்பர செலவு, டெலிவரி செலவு, ஜி.எஸ்.டி., வரி என பல்வேறு கட்டணங்களை பிடித்தம் செய்து, குறைந்தளவிலான தொகையை ஓட்டல் உரிமையாளர்களுக்கு வழங்குகின்றனர்.
'கமிஷன் தொகையை ஒழுங்கு
படுத்த வேண்டும். தவறும் ட்சத்தில், ஜூலை, 1 முதல், ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு வினியோகம் முழுவதுமாக நிறுத்துவோம்' என, கெடு விதித்தனர். இருந்தும், ஓட்டல் உரிமையாளர்கள் வைக்கும் கோரிக்கையை ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஏற்க மறுத்தன.
இதையடுத்து, திட்டமிட்டபடி ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு, நாமக்கல் நகரம் மற்றும் தாலுகாவில் உள்ள அனைத்து ஓட்டல், பேக்கரிகளில் இருந்து உணவுப்
பொருட்கள் சப்ளை செய்வது, நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, நாமக்கல் நகரம் மற்றும் தாலுகா ஓட்டல், பேக்கரி
உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள்குமரன் கூறியதாவது:
நாமக்கல் தாலுகாவில், 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் இருந்தும், 80 ஓட்டல்களில் மட்டுமே, ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யப்படுகிறது. இந்நிறுவனங்கள், ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்ப கமிஷனில் வேறுபாடு வைத்துள்ளதுடன், விளம்பர கட்டணம், மறைமுக கட்டணம் போன்றவற்றால் வருமானத்தில், 50 சதவீதம் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், அவற்றை ஒழுங்குப்படுத்த காலஅவகாசம் அளித்திருந்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்காததால், நேற்று முன்தினம் முதல், ஆன்லைன் உணவு சப்ளையை நிறுத்திவிட்டோம். அதன் மூலம், இரண்டு நாட்களில், 16 லட்சம் ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் சிரமத்தை போக்குவதற்காக, அந்த நிறுவனங்களுக்கு மாற்றாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 'அருகில்' மற்றும் சென்னையை சேர்ந்த, 'குயிக்கா' உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்களுடன் உடன்பாடு ஏற்படும்பட்சத்தில், உணவு டெலிவரி தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.