ADDED : அக் 16, 2024 07:01 AM
சேலம்: சேலம், கல்பாரப்பட்டியில் உள்ள ஜீவா பப்ளிக் பள்ளி, அதன் புதிய கிளை நிறுவனமான, ஜீவா கிட்ஸ் ஸ்கூலை, மழலையருக்கு மட்டுமாக, இளம்பிள்ளையில் விஜயதசமி அன்று தொடங்கியது. விழாவுக்கு பள்ளி தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். தாளாளர் பத்மநாபன், அனைவரையும் வரவேற்றார்.
முன்னதாக நவராத்திரி கொலு வைத்து, 9 நாள் மத நல்லிணக்கத்தை வளர்க்கும்படி பாடல்கள் பாடப்பட்டு பூஜை செய்யப்பட்டது. 10ம் நாளான விஜயதசமி அன்று ஆகம விதிப்படி, அரியானுார், 1,008 லிங்க கோவில் அர்ச்சகர் முருகன், விஜயதசமி, வித்யாரம்பம் பூஜை செய்து குழந்தைகளுக்கு அக்ஷ்ரா அபியாசம் செய்து வைத்தார்.
இந்த பள்ளி இளம்பிள்ளையை சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் கல்வி கற்றுத்தரும். பாடத்திட்டம் குறித்தோ மாணவர் சேர்க்கை குறித்தோ விபரம் தேவைப்பட்டால், 94452 86686, 83000 33533 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். பள்ளி நிர்வாகிகள் செல்வராஜ், விவேகானந்தன், சண்முகம், ஞானசேகரன், முதல்வர் மின்னல்கொடி, ஆசிரியர்கள், பணியாளர்கள், குழந்தைகளுடன் பெற்றோர் பங்கேற்றனர். முன்னதாக குழந்தைகளுக்கு சிறப்பு சலுகைகள், எழுதுபொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.