/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிய டவுன் பஸ் இயக்கம் ஆரத்தி எடுத்து வரவேற்பு
/
புதிய டவுன் பஸ் இயக்கம் ஆரத்தி எடுத்து வரவேற்பு
ADDED : ஜூலை 08, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், ஆத்துார்-புத்துார், ஊனத்துார் வழித்தடத்தில் புதிய டவுன் பஸ் இயக்கப்பட்டதால், பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
ஆத்துாரில் இருந்து, தலைவாசல், புத்துார் வழியாக ஊனத்துார் வரை, டவுன் பஸ் (எண்: 24), இயக்கப்பட்டு வருகிறது. பழைய டவுன் பஸ்சுக்கு பதிலாக, புதியதாக டவுன் பஸ் வழங்கப்பட்டது. இந்த பஸ் நேற்று, வழித்தடத்தில் இயக்கப்பட்டது. அப்போது, புத்துார் கிராமத்தில், ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கரய்யா, தி.மு.க., நிர்வாகிகள், பொதுமக்கள், ஆரத்தி எடுத்து புதிய பஸ்சை வரவேற்றனர். பஸ்சில் வந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.