/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது மின்மாற்றி அமைப்பு விவசாய பிரச்னைக்கு தீர்வு
/
புது மின்மாற்றி அமைப்பு விவசாய பிரச்னைக்கு தீர்வு
ADDED : ஜூலை 05, 2025 01:10 AM
பனமரத்துப்பட்டி,பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி கோணமடுவில், 150க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் உள்ளனர். அங்கு குறைந்த மின் அழுத்தத்தால், விவசாய மின் மோட்டார் இயங்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
வீடுகளிலும் மின் பற்றாக்குறை ஏற்பட்டதால், மக்கள் சிரமப்பட்டனர். இதனால் கோணமடுவு சேவை மையம் அருகே, 6.87 லட்சம் ரூபாய் மதிப்பில், 63 கே.வி., திறன் கொண்ட புது மின்மாற்றியை, வாரியம் அமைத்தது.
அதன் இயக்கத்தை, சேலம் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் திருநாவுக்கரசு, நேற்று தொடங்கி வைத்தார். சேலம் தெற்கு மின்வாரிய செயற்பொறியாளர் அன்பரசன், உதவி செயற்பொறியாளர் சத்தியமாலா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.