/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
40 முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்
/
40 முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்
ADDED : டிச 18, 2024 07:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ஓமலுார் அன்னையின் ஊக்குவிப்பு அறக்கட்டளை சார்பில், தாரமங்கலம் வள்ளலார் முதியோர் இல்லத்தில் நேற்று புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், புத்தாண்டில் புது ஆடை உடுத்த, 30,000 ரூபாய் மதிப்பில், அங்குள்ள, 40 முதியோர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டன.
அதேபோல் புத்தாண்டில் காலை, மதியம் உணவு வழங்க உள்ளனர். இதில் தலைவர் தங்கமணி, செயலர் முத்து, இணை செயலர் முஜிபுர் ரஹ்மான், தமிழ் மொழி மேம்பாட்டு குழு நிறுவனர் வினோதினி உள்பட பலர் பங்கேற்றனர்.