/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதிதாக சேர்ந்த மாணவர்கள் மேளதாளத்துடன் மரியாதை
/
புதிதாக சேர்ந்த மாணவர்கள் மேளதாளத்துடன் மரியாதை
ADDED : மார் 05, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்;அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளை, மேளதாளத்துடன் அழைத்து சென்று மரியாதை செய்தனர்.ஆத்துார் அருகே, புங்கவாடி கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்தது. இதில், 16 மாணவ, மாணவிகள் புதிதாக சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு பள்ளி சார்பில் தலைமையாசிரியர் சாந்தி தலைமையில் மாலை அணிவித்து, கிரீடம் வைத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று, வகுப்பறையில் அமர வைத்தனர். இசை ஆசிரியர் சேவியர் உள்பட பலர் உடனிருந்தனர்.

