/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுற்றுலா வேன் விபத்து தப்பிய புதுமண தம்பதி
/
சுற்றுலா வேன் விபத்து தப்பிய புதுமண தம்பதி
ADDED : செப் 21, 2024 07:37 AM
ஏற்காடு: அரூர், தேவேந்திரபட்டியை சேர்ந்த வினோத்குமார், பிரியாவுக்கு, கடந்த, 16ல் திருமணமானது. அவர்களுடன், 7 ஆண்கள், 6 பெண்கள், 7
குழந்தைகள் ஆகியோர், நேற்று காலை சுற்றுலா வேனில், ஏற்காடு வந்தனர். அரூர், சுண்டக்காம்பட்டியை சேர்ந்த ஆகாஷ், 26, ஓட்டினார்.ஏற்காடு வந்து சுற்றிப்பார்த்துவிட்டு, மாலை குப்பனுார் மலைப்பாதையில் திரும்பி சென்றனர். மாலை, 6:30 மணிக்கு மலைப்பாதையில் உள்ள
வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் அருகே, இறக்கமான சாலையில் வந்தபோது, 'பிரேக்' பிடிக்கவில்லை. இதனால் கட்டுப்பாட்டை இழந்து வேன்
ஓடியது. ஆகாஷ் வேனை நிறுத்த முயன்று திருப்பியதில், சாலையோர தடுப்பை இடித்து, அருகே இருந்த தேக்கு மர தோப்பில் சிறிது துாரம் ஓடி ஒரு
மரத்தில் மோதி நின்றது. இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு புதுமண தம்பதியர், வேனில் இருந்த அனைவரும் சிறு காயங்களுடன் உயிர்
தப்பினர்.