sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : பிப் 12, 2024 10:21 AM

Google News

ADDED : பிப் 12, 2024 10:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழுதான மின்விளக்கு

பரிதவிப்பில் மக்கள்

ஆட்டையாம்பட்டி, கை.புதுார் பாவடி ராஜகணபதி கோவில் அருகே, 2017ல் அப்போதைய எம்.பி., பன்னீர்செல்வம் தொகுதி வளர்ச்சி நிதியில், 6.90 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்கோபுர தெருவிளக்கு அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பின்றி விளக்குகள் அடிக்கடி பழுதாகின. இரு மாதங்களுக்கு மேலாக, விளக்குகள்

எரிவதில்லை.

இதனால் அதிகாலையில் காய்கறி சந்தைக்கு வரும் மக்கள், இருளில் தவிக்கின்றனர். மேலும் அந்த கம்பம் அருகே, அதன் மின் பெட்டி மூடி துருப்பிடித்து உடைந்து விழுந்ததால் எப்போதும் திறந்தே கிடக்கிறது. விளக்குகளை எரிய வைத்து, அதன் பெட்டிக்கு மூடி போட்டு முறையாக பராமரிக்க வேண்டும்.

பயிரை சேதப்படுத்தும்

காட்டுப்பன்றிகள்

பனமரத்துப்பட்டி, தும்பல்பட்டி ஊராட்சியில் ஜல்லுாத்துப்பட்டி, நடுப்பட்டி, மஞ்சப்பாலி, வேடப்பட்டி, நுாலாத்துக்கோம்பை, அடிமலைப்பட்டி, சாமகுட்டப்பட்டி கிராமங்கள், மலை அடிவாரத்தில் உள்ளன. மலை பகுதியில் ஏராளமான காட்டுப்பன்றிகள், மயில், குரங்கு உள்ளிட்டவை வசிக்கின்றன. அவை இரை தேடி விவசாய வயல் பகுதியில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இதுகுறித்து தும்பல்பட்டி விவசாயிகள் கூறியதாவது: மரவள்ளி, மக்காச்சோளம், நிலக்கடலை உள்ளிட்ட பயிர் செய்தோம். காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தின. மயில்கள், தானியம், தக்காளி, பழங்கள், சிறு தானியம் உள்ளிட்டவற்றை நாசப்படுத்தின.

இதனால் அரளி, பாக்கு, தென்னை போன்ற பயிருக்கு மாறிவிட்டோம். தென்னை குறும்பியை குரங்கு கூட்டம் பதம் பார்க்கின்றன. உணவு தேவைக்கு நெல், சோளம் உள்ளிட்ட தானியங்களை பயிர் செய்கிறோம். அதையும் விட்டுவைக்காமல் சேதப்படுத்துகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எச்சரிக்கையை மீறி வாகனங்கள் நிறுத்தம்

கோவை - உளுந்துார்பேட்டை 4 வழிச்சாலையில் சீலநாயக்கன்பட்டி முதல் குமரகிரி பைபாஸ் உடையாப்பட்டி வரை, வெளிமாநில கனரக வாகனங்கள், கன்டெய்னர் லாரிகள், விதிமீறி நிறுத்தப்படுகின்றன. அதை சுற்றி சர்வீஸ் சாலையில் டீக்கடை, ஓட்டல்கள் மட்டுமின்றி, எருமாபாளையம் பிரிவு, சன்னியாசிகுண்டு உள்ளிட்ட பகுதிகள் உள்ளதால், வாகன போக்குவரத்து எப்போதும் உள்ளது. ஆனால், 4 வழிச்சாலையின் பிரிவு சாலைகள் அருகே லாரிகளை நிறுத்துவதால், விபத்துகள் நடக்கின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகளை எச்சரிக்க, போலீசார் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதை மீறி சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம், வழக்குப்பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

சாலையில் மின்கம்பம்

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சேலம் ஒன்றிய அலுவலகம் அருகே கொல்லப்பட்டி மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பிரதான சாலை சந்திக்கும், 3 சாலை மையத்தில் தெருவிளக்கு மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால் பிரதான சாலையில் இருந்து மாரியம்மன் கோவில் தெருவுக்கு கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகள், அடிக்கடி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர். அதேபோன்று மற்றொரு மின்கம்பம், மாரியம்மன் கோவில் முன்புறம் உள்ளது. விபத்துக்கு வழிவகுக்கும் மின்கம்பங்களை அகற்றி, பாதுகாப்பான இடத்தில் மாற்றி வைக்க, மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

916 தெருவிளக்கு பராமரிப்பில் திணறல்

எலக்ட்ரீஷியன் பணி உருவாக்கப்படுமா?

பனமரத்துப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில், 30,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்குள்ள, 15 வார்டுகளில், 916 தெரு விளக்கு கம்பங்கள் உள்ளன. அதன் பராமரிப்பு பணி, நெத்திமேடு, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய மின்வாரிய அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து ஊராட்சி உறுப்பினர்கள் கூறியதாவது:

ஒரு கம்பத்தில் ஏறி தெரு விளக்கு பராமரிப்பு பணிமேற்கொள்ள மின் வாரிய ஒயர்மேன் ஒருவருக்கு, 25 ரூபாய் அரசு வழங்குகிறது. ஆனால் மின்வாரிய பணியாளர்களை அழைத்தால் உடனே வருவதில்லை. புகார் புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டு பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை விளக்கு எரியாமல் இருட்டில் மக்கள் தவிக்கின்றனர்.

அதனால் விளக்கு பராமரிப்புக்கு வெளியாட்களை தேடவேண்டியுள்ளது. அவர்கள் ஒரு கம்பத்தில் ஏற, 100 ரூபாய் கேட்கின்றனர். அதனால் எலக்ட்ரீஷியன் பணியிடம் உருவாக்கி ஆட்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பள்ளி அருகே 2 டாஸ்மாக் கடை

உடனே அகற்ற மக்கள் வலியுறுத்தல்

அரசு மகளிர் பள்ளி அருகே உள்ள இரு டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.

வாழப்பாடி, புதுப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே, தம்மம்பட்டி, மங்களபுரம் பிரிவு சாலை பகுதியில் நெடுஞ்சாலையோரம் அருகருகே இரு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கு தினமும் ஏராளமானோர், மது வாங்கி செல்லும் நிலையில், பலர் அங்கேயே அமர்ந்து குடிக்கின்றனர். இவர்களின் வசதிக்கு அப்பகுதியில் சில்லி, மானா உள்ளிட்ட இறைச்சி கடைகள் அதிகரித்துள்ளன. 'குடி'மகன்கள், வாகனங்களை நெடுஞ்சாலையோரமே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி மாணவியர், அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. சில நேரங்களில், 'குடி'மகன்கள், மாணவியருக்கு தொந்தரவு செய்கின்றனர். இதனால் இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும்.

இதுகுறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி கூறுகையில், ''புதுப்பாளையத்தில், 100 மீ.,க்கு மேல் தான் அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளால் பாதிப்பு இல்லை. இருப்பினும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்,'' என்றார்.

கற்கள் வீசி 2 தரப்பினர் மோதல்

4 பேர் காயம்; போலீஸ் குவிப்பு

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஓட்டலுக்கு நேற்று இரவு, 9:30 மணிக்கு டிபன் வாங்க வந்த இரு தரப்பை சேர்ந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். பின் இரு

தரப்பினர், கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். வீரகனுார் இன்ஸ்பெக்டர் காந்திமதி

உள்ளிட்ட போலீசார், இருதரப்பினரையும்

விரட்டிவிட்டனர்.

ஒரு தரப்பில் வெங்கடேஷ், 35, அறிவழகன், 30, தனுஷ், 21, ஆகியோரும் மற்றொரு தரப்பில் ராஜ்குமார், 30, என்பவரும் காயம் அடைந்து, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கெங்கவல்லி தனி பிரிவு ஏட்டு சுந்தர்ராஜன் மீது கற்கள் பட்டன.

ஆனால் அவர் ஹெல்மெட் போட்டிருந்ததால் காயமின்றி தப்பினார். மோதலை அடுத்து ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீரமாத்தி அம்மன் கோவில்

கும்பாபிஷேகம் கோலாகலம்

இடைப்பாடி அருகே காவேரிப்பட்டியில் உள்ள வீரமாத்தி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, கடந்த, 9ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கிராம சாந்தி, மருந்து சாத்துதல், முளைப்பாரி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பஞ்சகவ்ய பூஜை, வாஸ்து பூஜை, கங்கணம் கட்டுதலுக்கு பின் இரண்டு கால யாகபூஜை நடந்தது.

நேற்று சிவாச்சாரியார்கள், தீர்த்த குடங்களை எடுத்து கோவிலை சுற்றி வலம் வந்து விநாயகர், வீரமாத்தி அம்மன், கருப்பராயன் கோவில் கோபுரங்களில் உள்ள கலசங்கள் மீது ஊற்றினர். பின் திரண்டிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பிளஸ் 2 செய்முறை தேர்வு

இன்று தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் மார்ச்சில் நடக்க உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு செய்முறை தேர்வு நடக்க உள்ளது. அதன்படி பிளஸ் 2 படிக்கும், 23,379 மாணவர்களுக்கு பிப்., 12(இன்று) முதல், 17 வரையும், பிளஸ் 1 படிக்கும், 28,612 மாணவர்களுக்கு வரும், 19 முதல், 24 வரையும் நடக்கிறது. இதற்கு, 321 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அக, புற தேர்வாளர்களாக செயல்படுவர். இத்தேர்வுக்கு அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை, சேலம் மாவட்ட முதன்மை கல்வி

அலுவலர் கபீர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் வாலிபர் சாவு

ரவுடி படுகாயம்

சேலம், ரெட்டியூர், குள்ளக்கவுண்டர் தெருவை சேர்ந்த ரவுடி தினேஷ்குமார், 24. நகரமலை அடிவாரத்தை சேர்ந்தவர் வினோத், 20. இவர்கள் நேற்று முன்தினம் தண்ணீர்தொட்டி அருகே கபடி பார்க்க சென்றனர். பின், 'கே.டி.எம்., டியூக்' பைக்கில், இரவு, 11:00 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டனர். தினேஷ்குமார் ஓட்டினார்.

அழகாபுரம் காட்டூர் பிள்ளையார் கோவில் தெருவில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர கடையின் மீது மோதியது. அதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களது நண்பர்கள், இருவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வினோத் உயிரிழந்தார். அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஏற்காட்டில் கொளுத்தும் வெயில்

காட்டுத்தீயை தடுக்க வலியுறுத்தல்

ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளாக அங்கு பெய்யும் மழை அளவு குறைந்தது. கடந்த ஆண்டு ஜூன் முதல் அக்டோபர் வரை மழை பெய்தது. டிசம்பர் மாதம் முதல், வெயில் தாக்கம் அதிகரித்தது. தற்போது வழக்கத்தை விட அதிகமாக வெயில் அடித்து வருகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் வனப்பகுதியில் காய்ந்து கொட்டும் மரம், செடி, கொடிகள், தற்போதே காய்ந்து இலைகள் கொட்ட தொடங்கிவிட்டன. மலை பகுதி முழுதும் நிலத்தடி நீர் குறைந்து ஆங்காங்கே ஓடும் நீர்வீழ்ச்சிகள் வறண்டுள்ளன. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் ஏற்படும் காட்டுத்தீ, தற்போதே பற்றிக்கொள்ளும்படி சூழல் உள்ளதாக, ஏற்காடு உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்தனர். இதற்கேற்ப வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும், ஏற்காடு மக்கள் வலியுறுத்தினர்.

மனைவியை மிரட்டிய

இன்ஜினியர் கைது

சேலம், சீலநாயக்கன்பட்டி ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் ஆர்த்தி, 26. இவரது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் அதே பகுதியை சேர்ந்த, அமெரிக்கா வாழ் இந்தியரான, சாப்ட்வேர் இன்ஜினியர் பாஸ்கரன், 55, என்பவரை, 2ம் திருமணம் செய்துகொண்டார். ஆனால் தம்பதி இடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாஸ்கரன், அவருக்கு சொந்தமான விடுதியில் இருந்தார். அங்கு ஆர்த்தி, அவரது உறவினர்கள் வந்தனர். அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பாஸ்கரன் தகவல்படி டவுன் போலீசார் வந்தனர். தொடர்ந்து பாஸ்கரனை மீட்டு, ஜீப்பில் ஏற்றினர். அந்த வாகனம் முன் அமர்ந்து ஆர்த்தி தர்ணாவில் ஈடுபட்டார்.

அவரை அங்கிருந்து, போலீசார் அப்புறப்படுத்தினர். பின் ஆர்த்தி, டவுன் மகளிர் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். இதனால் கெட்ட வார்த்தையில் திட்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாஸ்கரனை கைது செய்தனர்.

புது ஏரியில் மூழ்கி

தனியார் ஊழியர் பலி

சேலம், கன்னங்குறிச்சி, பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 32. டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த இவர், தனியார் மசாலா நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நேற்று விடுமுறை என்பதால் நண்பர் தினேஷ்குமாருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தினார். மாலை, 5:30 மணிக்கு இருவரும் புது ஏரியில் குளிக்க சென்றனர்.

தினேஷ்குமார் கரையில் அமர்ந்து கொண்டார். ஜனார்த்தனன் ஏரியில் குளித்ததோடு, ஆழமான பகுதிக்கு சென்ற அவர், சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி இறந்துவிட்டார். கன்னங்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

பெரம்பலுார் - வீரகனுார் இடையே

அரசு பஸ் இயக்கத்தால் மகிழ்ச்சி

தலைவாசல் அருகே வீரகனுார் - பெரம்பலுார் வரை, 2008ல் அரசு பஸ் இயக்கப்பட்டது. அந்த பஸ், சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதே தடத்தில் மீண்டும் பஸ் இயக்க, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை உள்ளிட்ட மக்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு, கடந்த மாதம் மனு அளித்தனர். அதனால் பெரம்பலுாரில் இருந்து வேப்பந்தட்டை வழியே வீரகனுாருக்கு, நேற்று அரசு பஸ் இயக்கப்பட்டது.

அந்த பஸ்சை, சேலம் - பெரம்பலுார் மாவட்ட எல்லையான கிருஷ்ணாபுரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, தி.மு.க., தலைவாசல் தெற்கு ஒன்றிய செயலர் அழகுவேல், தலைவாசல், வீரகனுார் பகுதி ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இந்த பஸ் வசதியால், வீரகனுார் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வெள்ளி வியாபாரி கொலை

இரட்டை சகோதரிகள் கைது

சேலம், செவ்வாய்ப்பேட்டை, பாண்டுரங்கநாதர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர், 47. வெள்ளி வியாபாரியான இவர், கடந்த, 2ல் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். செவ்வாய்ப்பேட்டை போலீசார், சங்கரின் தங்கை கணவர் சுபாஷ்பாபுவை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், 'மனைவி விவாகரத்து செய்ததற்கும், குழந்தைகளை பார்க்க விடாமல் செய்ததற்கும் சங்கர் தான் காரணம் என கருதி, கூலிப்படையை ஏவி கொன்றேன்' என கூறினார்.

இதையடுத்து ரவுடி பாஸ்கர் தலைமையிலான கூலிப்படையினரை போலீசார் தேடினர். நேற்று முன்தினம், தி.மு.க., நிர்வாகியான, செவ்வாய்ப்பேட்டை அப்துல் முனாப் உள்பட, 4 பேரை கைது செய்தனர். நேற்று பாஸ்கரின் தங்கைகளான, அழகாபுரம் காட்டூரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் கீதா, 42, லதா, 42, ஆகியோரை கைது செய்தனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைது எண்ணிக்கை, 7 ஆக உயர்ந்தது. மேலும் பாஸ்கர், அவரது தம்பி ராஜாவை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us