தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஊர் வழிகாட்டி பலகை இல்லை வெளியூர் வாகன ஓட்டிகள் அவதி

ஊர் வழிகாட்டி பலகை இல்லை வெளியூர் வாகன ஓட்டிகள் அவதி

ஊர் வழிகாட்டி பலகை இல்லை வெளியூர் வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஆக 29, 2026 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்-டியில் பனமரத்துப்பட்டி பிரிவு மேம்பாலம் உள்ளது. அந்த பாலம் தொடங்கும் பகுதியில் கெஜ்ஜல்

நாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, சர்வீஸ் சாலை-யோரம் பனமரத்துப்பட்டிக்கு வழி காட்டும் ஊர் பெயர் பலகை இருந்தது. அது அடியோடு சாய்ந்ததால் அகற்றப்பட்டது. அங்கு, மீண்டும் ஊர் பெயர் பலகை வைக்கவில்லை.

இந்நிலையில் வெளியூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், பன-மரத்துப்பட்டிக்கு செல்வதற்கு சர்வீஸ் சாலை வழியே வராமல் மேம்பாலத்தில் செல்கின்றனர். பின், பல கி.மீ., சுற்றிய படி, மீண்டும் பனமரத்துப்பட்டி பிரிவுக்கு வருகின்றனர். அதனால் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே, மீண்டும் ஊர் வழிகாட்டி பலகை வைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us