ADDED : ஆக 29, 2026 01:49 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் நேசக் கரங்கள் அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம், ஏற்காடு, அடிவாரத்திலுள்ள முதியோர் இல்லத்தில் நடந்தது. துணைத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். செயலர் பெரியசாமி அறிக்கை வாசித்தார்.
அதில் புது நிர்வாகி கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி பாஸ்கரன் தலைவராகவும், டாக்டர் சுகந்திமணி மற்றும் குப்புரத்தினம் பிரபாகரன், உதவி தலைவர்களாகவும், பெரியசாமி செயலராகவும், பாலசங்கர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். அறங்காவலர்கள் சடையப்பன், இளங்கோ, டாக்டர் செல்வராஜ், பொறியாளர் பாஸ்கர் பங்கேற்றனர். மேலும் இல்ல வளர்ச்சி, முதியோர், குழந்தைகள் நலன் குறித்து ஆலோ-சிக்கப்பட்டது.
