ADDED : ஆக 29, 2026 01:50 AM
அ நிறம் | அளவு
அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், ராமலிங்கபுரம் அருகே நொச்சிப்பட்-டியை சேர்ந்தவர் வசந்தா, 70. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு, அதே பகுதியில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது கமலேஷ், 20, என்பவர், சேலம் நோக்கி ஓட்டிச்சென்ற, 'பல்சர்' பைக் மோதியதில், வசந்தா துாக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார்.
கமலேஷ், அவருடன் பைக்கில் வந்த அவரது நண்பர் ரஞ்சித் குமாரும் காயமடைந்தனர். 3 பேரையும் மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இரவு வசந்தா உயிரி-ழந்தார். கமலேஷ் அரசு மருத்துவமனையிலும், ரஞ்சித்குமார், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்-டுள்ளனர். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
