தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பந்தலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு

பந்தலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு

பந்தலை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு


ADDED : ஆக 29, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்க உள்ளது. அதை ஒட்டி, பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றி-யுள்ள முக்கிய வீதிகளில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்த போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், பாது-காப்பு கருதி, யாகசாலை பந்தலை தவிர, மற்ற பந்தல்களை அகற்ற உத்தரவிட்டனர்.

இந்நிலையில் நேற்று, பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், இந்து முன்னணி கோட்ட தலைவர் சந்தோஷ் ஆகியோர் அளித்த பேட்டி:

பக்தர்கள் வசதிக்கு, கோவிலின் முன்பும், அருகே உள்ள சாலைக-ளிலும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற, அதிகா-ரிகள் கூறி வருகின்றனர். இதனால் விழா பணி பாதிப்படையும். இச்செயல் பக்தர்கள் மனதை புண் படுத்தியுள்ளது. கும்-பாபிேஷக விழா சிறப்பாக நடக்க, அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us