ADDED : ஆக 29, 2026 01:51 AM
அ நிறம் | அளவு
நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே பெரிய சோரகை மக்கள், வி.பி.ஜி., ராம்ஜி திட்டத்தில் முறையாக வேலை வழங்குவது கிடையாது என ஊராட்சி அதிகாரிகளை கண்டித்து, தாரமங்கலம் - நங்கவள்ளி சாலையில், நேற்று காலை, 8:30 மணிக்கு மறியலில் ஈடுபட்-டனர். போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
நங்கவள்ளி போலீசார், பி.டி.ஓ., கல்யாணகுமார் வந்து பேச்சு நடத்தினர். அனைவருக்கும் முறையாக வேலை வழங்க நடவ-டிக்கை எடுப்பதாக பி.டி.ஓ., தெரிவித்தார். இதனால் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
