/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'தி.மு.க., எத்தனை குட்டி கரணம் போட்டு சூழ்ச்சி செய்தாலும் விரட்டி அடிக்கப்படும்'

ADDED : ஜூலை 06, 2025 01:16 AM
கெங்கவல்லி, அ.தி.மு.க., சார்பில், கெங்கவல்லி தொகுதி ஓட்டுச்சாவடி பாக கிளை செயலர்கள் ஆலோசனை கூட்டம், கெங்கவல்லியில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., நல்லதம்பி தலைமை வகித்தார். அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
தி.மு.க., ஓரணி, ஈரணி என, எத்தனை குட்டி கரணம் போட்டு, சேலத்தில் எந்த சூழ்ச்சி செய்தாலும், அ.தி.மு.க.,வால் விரட்டி அடிக்கப்படும். 2026 சட்டசபை தேர்தலில், இ.பி.எஸ்., வியூகத்திடம், ஸ்டாலின் திட்டம் தோல்வி பெறும். மீண்டும் இத்தொகுதியில், அ.தி.மு.க., 50,000 ஓட்டுகள்
வித்தியாசத்தில் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய செயலர்கள் ரமேஷ், ராஜா, பேரூர் செயலர் இளவரசு உள்பட பலர் பங்கேற்றனர்.