/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மகளிர் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது'
/
'மகளிர் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது'
ADDED : பிப் 08, 2025 06:44 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சி, புனல்வாசல், புளியங்குறிச்சி, ஊனத்துார், நாவக்குறிச்சி கிராமங்-களில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நேற்று நடந்தது. சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் பேசியதா-வது:மகளிர் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது. 50 ஆண்டுகளுக்கு மேல் இத்திட்டம்
தொடரும். மாணவர்களை உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும். ரேஷன் கடையில் வேலை கிடைக்குமா?
சாராய கடையில் வேலை கிடைக்குமா? ஸ்வீப்பர் வேலை கிடைக்குமா என எண்ணக்கூடாது. கல்வி,
அறிவியலில் முன்னேற்றமடைந்த மாநிலம் தமிழகம்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவலிங்கம், சின்னதுரை, குணசே-கரன், டி.ஆர்.ஓ., ரவிக்குமார், தாசில்தார்
பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, 439 பயனாளிகளுக்கு, 24.68 லட்சம் ரூபாயில் நலத்-திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆத்துார், தலைவாசல், பெத்த-நாயக்கன்பாளையம் ஒன்றியங்களில், 3 நாட்களில், 20 இடங்-களில்
நடந்த முகாம்களில், 5,425 மனுக்கள் பெறப்பட்டு, 1,718 பேருக்கு, 1.55 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகள்
வழங்கப்பட்-டுள்ளன.மேலும் நாவக்குறிச்சியில் நடந்த முகாமில், 50 வயது பெண், அமைச்சர் கணேசனிடம், 'என் சொத்தை
சிலர் எழுதி வாங்கிக்-கொண்டதால், அனாதையாக உள்ளேன்' என கதறி அழுதார். அவ-ரிடம், 'உங்கள் புகார்
மீது விசாரித்து தீர்வு காணப்படும்' என, அமைச்சர் உறுதி அளித்தார்.