/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நியமன உறுப்பினர் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் தர்ணா
/
நியமன உறுப்பினர் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் தர்ணா
நியமன உறுப்பினர் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் தர்ணா
நியமன உறுப்பினர் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் தர்ணா
ADDED : டிச 02, 2025 02:23 AM
சேலம், ஒபூர் பேரூராட்சி, 13வது வார்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி அலெக்சாண்டர், 37. இவர், சக மாற்றுத்திறனாளிகளுடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தவர், பின், வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் தர்ணாவை கைவிடவில்லை.
இதுபற்றி அலெக்சாண்டர் கூறியதாவது:
கருப்பூர் பேரூராட்சியில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவியில் முறைகேடு நடந்துள்ளது. கலெக்டர் தலைமையிலான குழுவினர், நேர்முக தேர்வு நடத்தாமல், முறைகேடாக 7 வது வார்டை சேர்ந்த தங்கமணி என்பவரை, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்துள்ளனர். சமூக சேவையில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நியமன உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இதேநிலை, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளதால் தேர்வு செய்துள்ள அனைத்து நியமன உறுப்பினர்களையும் ரத்து செய்துவிட்டு, சமூக சேவையில் ஈடுபடும் தகுதி வாய்ந்த மாற்றுத்தினாளிகளுக்கு, நியமன உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
வாழப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அசோக்குமார் கூறுகையில், ''வாழப்பாடி பேரூராட்சியில், தி.மு.க., ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக, பிலவேந்திரன் நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்,'' என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி, தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறியதையடுத்து, தர்ணா கைவிடப்பட்டது.

