/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் வழியே முன்பதிவற்ற ரயில் நாளை முதல் இயக்கம்
/
சேலம் வழியே முன்பதிவற்ற ரயில் நாளை முதல் இயக்கம்
ADDED : ஜன 26, 2024 10:04 AM
சேலம்: எர்ணாகுளத்தில் இருந்து ஈரோடு, சேலம் வழியே ஒடிசாவுக்கு, வாராந்திர முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரயில், நாளை முதல் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிக்கை: எர்ணாகுளத்தில் ஜன., 27, பிப்., 3, 10, 17, 24 ஆகிய நாட்களில் இரவு, 11:00 மணிக்கு புறப்படும் முன்பதிவற்ற எக்ஸ்பிரஸ் ரயில் திங்கள்தோறும் அதிகாலை, 5:00 மணிக்கு ஒடிசா மாநிலம் பிரம்மாபூரை அடையும். மறுமார்க்கத்தில் ஜன., 29, பிப்., 5, 12, 19, 26 ஆகிய நாட்களில் மதியம், 12:40க்கு புறப்படும் ரயில் செவ்வாய்தோறும் இரவு, 9:40 மணிக்கு எர்ணாகுளத்தை அடையும். இந்த ரயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

