/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மாடி தோட்டத்தில் நஞ்சில்லா காய்கறி'
/
'மாடி தோட்டத்தில் நஞ்சில்லா காய்கறி'
ADDED : செப் 20, 2024 01:50 AM
'மாடி தோட்டத்தில் நஞ்சில்லா காய்கறி'
பனமரத்துப்பட்டி, செப். 20-
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாடி தோட்டம் அமைக்கும் முறை குறித்த பயிற்சி நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் தலைமை வகித்தார்.
அதில் காடையாம்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் பேசுகையில், 'சரிவிகித சத்தான உணவு, காய்கறி, கீரை, பழங்களில் கிடைக்கும். மாடி தோட்டத்தை இயற்கை முறையில் பராமரிப்பதன் மூலம் நஞ்சில்லா காய்கறி, கீரைகள் கிடைக்கும்,'' என்றார். வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு இணை பேராசிரியர் ரவி, நோய் மேலாண் குறித்தும், இணை பேராசிரியர் ஆனந்த், ஆன்லைன் விற்பனை குறித்தும் பயிற்சி அளித்தனர். மாடி தோட்டம் அமைக்க அரசு வழங்கும் மானியத்தை பெற விண்ணப்பிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத்தின் மாடி தோட்டத்தில் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். ஏராளமானோர் பயன் பெற்றனர்.