/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'
/
4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'
4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'
4 ஆண்டு தி.மு.க., ஆட்சியில் நல்லது எதுவும் நடக்கவில்லை'
ADDED : ஜூலை 26, 2025 01:41 AM
ஓமலுார், விலைவாசி, மின் கட்டண உயர்வை கட்டுப்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், ஓமலுார்
சட்டசபை தொகுதிக்குட்பட்ட காடையாம்பட்டியில் கண்டன பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார்.
அதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:
கடந்த, 4 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தவறு மட்டும் நடந்துள்ளது. நல்லது எதுவும் நடக்கவில்லை. உறுப்பினர்களை சேர்க்கிறோம் என, வீடுகள் தோறும் சென்று கதவை தட்டுகின்றனர். மக்கள் துரத்தி அனுப்புகின்றனர். ஓ.டி.பி., கேட்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 ஆண்டுகளில், 40 லட்சம் கோடி ரூபாய் கடனை வாங்கியுள்ளனர். மக்களுக்கான ஆட்சி தந்த ஒரே முதல்வர், இ.பி.எஸ்., தான். கும்மிடிப்பூண்டிலிருந்து குமரி வரை சாலைகளை அகலப்படுத்தி, பல பாலங்களை கட்டியவர். இன்னும், 7 மாதங்களில், தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஒன்றிய செயலர் சுப்ரமணி, நகர செயலர் ஆனந்தகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.