ADDED : ஜன 08, 2026 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: ஏற்காடு, ஒண்டிக்கடை ரவுண்டானா அருகே கொம்மக்காடு செல்லும் வழியில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால், மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனால் நேற்று ஊராட்சி ஒன்றியம், வருவாய் துறை நிர்வாகம் சேர்ந்து, கழிவுநீரை சாலையில் விடும் உணவகங்கள், தங்கும் விடுதிகளுக்கு 'நோட்டீஸ்' வழங்கினர்.அதில், 'வரும், 15க்குள், கழிவுநீர் சாலையில் ஓடாதபடி மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். மீறினால், விடுதி, உணவகத்துக்கு வழங்கிய உரிமம் ரத்து செய்யப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.

