/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணி நியமனத்தை ரத்து செய்து ஏன் நீக்கக்கூடாது விளக்கம் கேட்டு 80 சமையலர்களுக்கு 'நோட்டீஸ்'

ADDED : மே 07, 2025 01:58 AM
சேலம்:சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் இயங்கும் விடுதி, உறைவிட பள்ளிகளில் காலியாக இருந்த, 80 சமையலர் பணியிடம், 2015 - 16ல் நிரப்பப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் நடந்தது.
இதை எதிர்த்து, ஓமலுார், முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் உள்பட, 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், அந்த பணி நியமனத்தை ரத்து செய்து, தமிழக அரசு பணி நியமன விதிப்படி, புதிதாக அறிவிப்பு வெளியிட்டு பணி நியமனம் செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மனுதாரர்கள் தரப்பில், கடந்த மார்ச், 28ல் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அதில் உரிய விதிமுறைகளை பின்பற்றி, தகுதியான சமையலர்களுக்கு மட்டும் மறு நியமனம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார், கடந்த ஏப்., 22ல், சமையலர், 80 பேரிடம் விளக்கம் கேட்டு தனித்தனியே, 'நோட்டீஸ்' அனுப்பினார்.
ஆதிதிராவிட நல அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், ''கலெக்டரின் ஒப்புதல் பெற்று, 80 சமையலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் மனு பெறப்பட்டு வருகிறது. இனி கலெக்டர் வழிகாட்டுதல்படி, பணிநீக்கம் தொடர்பான அடுத்த நகர்வு இருக்கும்,'' என்றார்.