ADDED : டிச 26, 2024 01:29 AM
ஓமலுார், டிச. 26-
ஓமலுார் அருகே ஆர்.சி., செட்டிப்பட்டியில் நர்சரி கார்டன் நடத்துபவர் கோவிந்தராஜ், 50. இவரிடம், ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்த அபிேஷக், 19, ஓராண்டுக்கு முன் பணியில் இருந்தார். அப்போது கோவிந்தராஜ், அவரது பெயரில் அபி ேஷக்குக்கு, 'பல்சர்' பைக்கை, 'பைனான்ஸ்' மூலம் வாங்கி கொடுத்துள்ளார். சில மாதங்களுக்கு பின், அபி ேஷக் தவணையை முறையாக செலுத்தவில்லை
என்பதால், பைக்கை பறிமுதல் செய்தனர்.
இதற்கு கோவிந்தராஜ் தான் காரணம் என, அபி ேஷக் எண்ணினார். இந்த முன்விரோதத்தில், கடந்த, 22ல், அபிேஷக், அவரது நண்பர் சந்தோஷ், 19, ஆகியோர், கோவிந்தராஜ் நர்சரிக்கு சென்று, 50,000 ரூபாய் மதிப்பில் செடிகளை, இரும்பு கம்பியால் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கோவிந்தராஜ் புகார்படி, ஓமலுார் போலீசார் நேற்று, அபிேஷக், சந்தோைஷ கைது செய்தனர்.

