ADDED : டிச 21, 2025 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தொகுப்பூதிய செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யக்கோரியும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டியும், சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சேலம் அரசு மருத்துவ-மனை முன், நேற்று முன்தினம் தொகுப்பூதிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, 2ம் நாளாக நேற்று, அதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் அமர்ந்து, தொகுப்பூதிய செவிலி-யர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், 'மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, 2015 முதல் பணியில் சேர்ந்த எங்களை,
2 ஆண்டில் நிரந்தரம் செய்வ-தாக தெரிவித்தனர். இதுவரை செய்யவில்லை. தவிர தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்' என்றனர்.

