ADDED : அக் 01, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், புதுப்பாளையம் கோவில் காட்டை சேர்ந்த, அழகேசன் மகன் ஹரீஷ், 19. சேலம் அரசு மருத்துவ கல்லுாரியில் முதலாம் ஆண்டு, 'நர்சிங்' படித்து வந்தார். விடுமுறை நாட்களில் உறவி-னர்களுடன் சேர்ந்து, மேற்கூரை அமைக்கும் பணி செய்து வந்தார்.
நேற்று கொண்டலாம்பட்டி, மேட்டு வெள்ளார் தெருவில் உள்ள கார் பட்டறையில் மேற்கூரை போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் இறந்துவிட்டார். அன்னதானப்பட்டி போலீசார் விசா-ரிக்கின்றனர்.
